பாமகவினருடன் தங்கர்பச்சான்
பாமகவினருடன் தங்கர்பச்சான் 
அரசியல்

பிரசாரத்திற்கு வரத் தயங்கும் திரைப்பிரபலங்கள்... பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் அதிர்ச்சி!

காமதேனு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இயக்குநர் தங்கர்பச்சானுக்கு ஆதரவாக  பிரசாரம் செய்ய திரைப்பிரபலங்கள் சிலர் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாமக நிறுவனருடன் தங்கர்பச்சான்

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கூட்டணிகளும்,  கூட்டணி இல்லாமல் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. இதில்  பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கூட்டணியில் பாஜகவை அடுத்து பெரிய கட்சியாக இருக்கும் பாமகவுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் சௌமியா அன்புமணி,  வழக்கறிஞர் கே.பாலு மற்றும் தங்கர்பச்சான் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியிடுகிறார்கள்.

திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானுக்கு கடலூர் தொகுதி சொந்த தொகுதியாகும். அதனால் அவர் வெற்றி பெற்று விடலாம் என்று மிகுந்த நம்பிக்கை களத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திரை பிரபலங்கள் சிலரை தங்கர்பச்சான் தரப்பில் அணுகியிருக்கிறார்கள். குறிப்பாக தங்கர்பச்சான் படத்தில் நடித்த சேரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலரிடமும் தங்கர்பச்சானுக்காக கடலூர் தொகுதியில் வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

தங்கர்பச்சான்

"எங்கள் இயக்குநருக்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் இருப்பது பாஜக கூட்டணியில்  என்பது தான் எங்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. இந்த ஒரே காரணத்துக்காக அவருக்காக  நாங்கள் பிரசாரம் செய்வது இயலாது" என்று அவர்கள் கைவிரித்து விட்டனராம். ஆனால், அப்செட்டான தங்கர்பச்சான் தடதடவென தேர்தல் களத்தில் தீவிரம் காட்டி வருகிறார். பாமகவினரும் பயங்கர சுறுசுறுப்புடன் அவருக்குத் தேர்தல் பணிகளைக் கவனித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT