டெல்லி காவல் நிலையத்தில் ஆதரவாளர்களுடன் சத்ய பால் மாலிக்
டெல்லி காவல் நிலையத்தில் ஆதரவாளர்களுடன் சத்ய பால் மாலிக் 
அரசியல்

சத்யபால் மாலிக் கைது?

காமதேனு

சிபிஐ விசாரணைக்கு ஆளாகும் சத்ய பால் மாலிக்கிற்கு ஆதரவாக காப் பஞ்சாயத்து மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் திரண்டுள்ளனர். இதனிடையே சத்யபால் மாலிக் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் உட்பட 4 மாநிலங்களின் ஆளுநராக இருந்தவர் சத்ய பால் மாலிக். இவர் பாஜகவை சேர்ந்தவராக இருந்தபோதும் விவசாயிகள் ஆதரவு உட்பட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்தார். அதன் பிறகு ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகும், தன்னுடைய இயல்பிலிருந்து மாற்றமின்றி செயல்பட்டார்.

அண்மையில் இணையதளம் ஒன்றுக்காக சத்ய பால் மாலிக் அளித்த பேட்டி சர்ச்சையானது. புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியானதில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அலட்சியமாக செயல்பட்டதாக அதில் குற்றம்சாட்டியிருந்தார். நாடு முழுக்க அவை அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அந்த பேட்டியில், ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்பாக அவர் வெளியிட்ட ஒரு தகவல், சத்ய பால் மாலிக்கை விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ அழைப்பு விடுக்கும்படி போனது. ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தபோது, ரிலையன்ஸ் காப்பீட்டு நிறுவனத்துக்கு சகாயம் செய்யும்படி தான் வற்புறுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். அப்போதைய பாஜக - தற்போதைய ஆர்எஸ்எஸ் நிர்வாகியான ராஜ் மாதவ் என்பவர், அதற்காக ரூ.300 கோடி பணம் தர முன்வந்ததாகவும் சத்ய பால் மாலிக் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஏப்.28 அன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சத்யபாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதனிடையே சத்ய பால் மாலிக் மீது அபிமானம் கொண்ட ஹரியானா, டெல்லி, உத்தபிரதேசம், ராஜஸ்தான், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அவரது இல்லத்தில் நேற்று முதல் கூடத் தொடங்கினர். அவர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் காப் பஞ்சாயத்து தலைவர்கள் ஆவர்.

சத்யபாலுக்கு தங்களை ஆதரவை தெரிவிக்கும், அவர் வீடு அருகே இருந்த பூங்காவில் கூடினார்கள். அனுமதியின்றி கூடியதாக அவர்களை போலீஸார், டெல்லி ஆர்கே புரம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனையடுத்து சத்யபால் மாலிக்கும் காவல் நிலையம் விரைந்தார். அங்கே சத்யபால் மாலிக் உட்பட அவரது ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்ததாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.

சத்யபால் மாலிக் கைதானதாக வெளியான தகவலை டெல்லி போலீசார் மறுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT