வி.கே. சசிகலா
வி.கே. சசிகலா 
அரசியல்

'திமுகவினரின் பகல்வேஷத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டனர்' - சசிகலா கோபம்

காமதேனு

ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து கொண்டு தற்போது ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியிருப்பதன் மூலம் திமுகவினரின் பகல்வேஷத்தை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டனர் என சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைமையிலான அரசு ஆவினில் விற்பனை செய்யப்படும் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

திமுகவினர் தேர்தல் அறிக்கையில் ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து கொண்டு தற்போது ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியிருப்பதன் மூலம் திமுகவினரின் பகல்வேஷத்தை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டனர்.

மேலும், மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விலை மாற்றமில்லாமல், சில்லறை விற்பனை விலையை உயர்த்தியிருப்பதால், பெரிய அளவில் முறைகேடுகளுக்கு வழிவகுக்கவும், தனியார் பால் விற்பனையை அதிகரிக்கவும் திமுகவினர் உதவுவதாகத் தெரிகிறது. இதனால் அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் நஷ்டம் ஏற்படும்.

திமுக தலைமையிலான அரசு ஏற்கனவே ஆவின் பால் பொருட்களின் விலையை அதிகளவில் உயர்த்திய நிலையில், தற்போது ஆரஞ்ச் பாக்கெட் பால் விலையையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி இருப்பதால் தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள்.

எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக விளங்கக்கூடிய ஆவின் பாலின் விலையை திமுக தலைமையிலான அரசு உயர்த்தியிருப்பதை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT