ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ 
அரசியல்

`அவரை நம்பித்தான் குடும்பம் இருந்தது'- மாடு முட்டி பலியான வாலிபர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

காமதேனு

கல்நார்சாம்பட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டி பலியான வாலிபர் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மமக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், `திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே கல்நார்சாம்பட்டி மஞ்சுவிரட்டு நடந்தது, இதில், ஜோலார்பேட்டை அருகே கம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த பீடி தொழிலாளி தவ்லத் மகன் முஷ்ரப் (19 ) மாடு முட்டி இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அவரது உழைப்பை நம்பி இருந்த அக்குடும்பம் தற்போது கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், முஷ்ரப் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸார் தாக்கியதால் அந்த வாலிபர் தான் இறந்தார் என வதந்தி பரப்பியதால், போலீஸாருடன் தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பாக 8 பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறுவன் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்களின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி போலீஸார் விடுவிக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT