செய்தியாளர்களை சந்தித்த சலீம்  
அரசியல்

நான்கு வழிச்சாலையால் புதுச்சேரியின் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது: இந்திய கம்யூனிஸ்ட்

காமதேனு

புதுச்சேரியில் நீர் ஆதாரங்களை  பாதுகாக்கும் பனை மரங்களை வெட்டுவதை தடுக்க தடை சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த மாநில செயலாளர் சலீம், "சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை அமைய உள்ள நான்கு வழி சாலையால்  புதுச்சேரியின் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

சாலை ஓரங்களில் உள்ள பனை மரங்களை அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீர் ஆதாரங்களை பாதுகாக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும், மனுக்கள் கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை. இதை ஒரு முக்கியமான விஷயமாக புதுச்சேரி அரசு கண்டு கொள்ளவில்லை.

அதனால் இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பில் திருபுவனைப் பகுதியில் உள்ள பனை மரங்களை வெட்டக்கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. தமிழகத்தில் உள்ளது போல பனைமரங்களை வெட்ட  புதுச்சேரியிலும் தடைச்சட்டம் கொண்டுவர வேண்டும். பனைமரங்களை பாதுகாக்க குழு அமைக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது.., "புதுச்சேரியை மத்திய அரசு மிகவும் மோசமாக வஞ்சித்து வருகிறது. ரேஷன் கடைகளை உடனடியாக திறக்கப்பட வேண்டும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்,  ஆனால் ஏமாற்றுகின்ற அளவில் புதுச்சேரி அரசு செயல்படுகிறது. பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறி வரும்  நிலையில் ஒவ்வொரு அரசு பள்ளியாக மூடப்பட்டு வருகிறது.  மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது.

SCROLL FOR NEXT