பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம்
பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம் 
அரசியல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அடடே விளக்கம்!

காமதேனு

மத்தியில் ஆளும் பாஜக கட்சியை சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் இருந்து நாடாளுமன்றம் சென்றால் தான் மாநில வளர்ச்சிக்கு அதிகம் நிதி கொண்டுவர முடியும் என முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரத்தின் போது பேசினார்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி தேங்காய்திட்டு மற்றும் அரியாங்குப்பம் பகுதியில் தீவிர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ”இந்த அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீனவ சமுதாய மக்களுக்கு ஆண்டுக்கு 123 கோடி ரூபாய் ஒதுக்கி கொடுத்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு நிதி ஒதுக்கி எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை படிக்க உதவி வருகிறது” என்றார்.

பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம்

மேலும், ”300 இருதய அறுவை சிகிச்சைகளை நமது அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. அரசு பொறுப்பேற்ற பிறகு 2,000 இளைஞர்களுக்கு அரசு நிரந்தர வேலை கொடுத்துள்ளது, தேர்தல் முடிந்த உடன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப உள்ளோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க புதிய தொழிற்பேட்டையை சேதராப்பட்டில் 750 ஏக்கரில் நிறுவ உள்ளோம். மத்திய அரசு உதவியாக இருந்ததால் தான் இவையெல்லாம் சாத்தியம்.” என்றார்.

பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம்

தொடர்ந்து பேசிய அவர், “நாம் மத்திய அரசுடன் சுமூகமாக இருப்பதால் தான் அதிக நிதி கிடைக்கிறது. மத்திய அரசில் என்ன ஆட்சி நடக்கிறதோ அந்த கட்சி புதுச்சேரியிலும் இருப்பதால் தேவையான நிதியை கொடுக்கிறது. அதுமட்டும் போதாது. அதே கட்சியை சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக சென்றால் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நமக்கான திட்டங்களை கொண்டுவர எளிதாக இருக்கும். காங்கிரஸில் இருந்து நாடாளுமன்றத்திற்கு சென்றவர்கள் கொஞ்சம் பேர் தான். அவர்கள் அங்கு யாரையும் பார்க்க முடியாது. எதுவும் கேட்கமுடியாது” என பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

SCROLL FOR NEXT