அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்  ஆடியோ பதிவு குறித்து பிடிஆரிடம்தான் கேட்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
அரசியல்

ஆடியோ பதிவு குறித்து பிடிஆரிடம்தான் கேட்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

காமதேனு

"ஆடியோவில் உள்ள பதிவுகள் வெட்டி ஒட்டப்பட்டது என பிடிஆர் விளக்கம் அளித்திருக்கிறார். மேலதிக தகவல்களை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், சிஏஜி அறிக்கை குறித்து அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், "இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள நிதி இழப்பு, வீண் செலவு, மோசடி ஊழல் குறித்தெல்லாம் சரியாக தீர்வு காணப்படும் என்றார்.

திமுகவினரின் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டு இருக்கிறார்? என்ற கேள்விக்கு, "வழக்கமாக வேட்புமனு தாக்கலின்போது, இதுபோன்ற சொத்து பட்டியல் விவரம் தெரிவிக்கப்படும். அதனை எடுத்து பத்திரிகையில் தெரிவிப்பது பெரிய விஷயம். அல்ல யார் மீதெல்லாம் அவர் குற்றம்சாட்டியிருக்கிறாரோ அவர்கள் எல்லோரும் இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள் என்றார் அமைச்சர்.

அமைச்சர் பிடிஆர் ஆடியோ என அண்ணாமலை வெளியிட்டுள்ளாரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "பிடிஆர் அந்த ஆடியோவில் உள்ள பதிவுகள் வெட்டி ஒட்டப்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார். மேலதிக தகவல்களை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.

மெட்ரோ நிறுவனம் தொடர்பாக முதலமைச்சர் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு, மெட்ரோ நிறுவனம் பணம் கொடுத்ததாக சொன்ன கருத்தை அந்த நிறுவனத்தினர் மறுத்திருக்கிறார்கள். அதையும் பாருங்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறி வருகிறார் என்றார்.

பட்டியலின மக்களுக்கான நிதியை திமுக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக குற்றம்சாட்டப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பட்டியலின மக்களின் நலனுக்கான பணத்தை திமுக அரசு மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய வரலாறு கிடையாது என்றார்.

SCROLL FOR NEXT