மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் 
அரசியல்

‘தளபதி’ ஸ்டாலினைச் சீண்டும் ‘தளபதி’ விஜய் ரசிகர்களின் போஸ்டர்!

காமதேனு

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சீண்டும் வகையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் அவ்வப்போது விதவிதமான போஸ்டர்களை ஒட்டி திக்குமுக்காட வைப்பார்கள்.

ஆனால், மதுரையில் அவரது ரசிகர்கள் தற்போது ஒட்டியுள்ள போஸ்டர், திமுகவினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், “முடிவு எடுத்தால் முதல்வர்தான். 2021-ல் தளபதி, 2026-ல்-தளபதி என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 2021-ல் தளபதி என்ற வாசகத்தில் முதல்வர் ஸ்டாலினைக் குறிப்பிடும் வகையில் கருப்பு, சிவப்பு எழுத்துகளும், 2026-ல் தளபதி என்பதை சிவப்பு கலரிலும் எழுத்துகளை வித்தியாசப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் 2026-ல் முதல்வர் வேட்பாளர் என நடிகர் விஜய் படத்தையும், 2026-ல் தளபதி மக்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் என பிரசாந்த் கிஷோர் படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் விஜய் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT