அரசியல்

தமிழ்நாடு அரசு சின்னத்தை தவிர்த்து பொங்கல் அழைப்பிதழ்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்

காமதேனு

தமிழ்நாடு அரசின் சின்னத்தை தவிர்த்து பொங்கல் அழைப்பிழை அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. மீண்டும் மீண்டும் ஆளுநர் இப்படி நடந்து கொள்ளும் செயல் அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். இதனிடையே பொங்கல் விழாவில் பங்கேற்க வருமாறு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆளுநர் மாளிகையில் வரும் 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தங்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் தமிழக ஆளுநர் அவர்களின் துணைவியார் லட்சுமி ரவி அவர்களும் அன்புடன் அழைக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 மற்றும் 2023-ம் ஆண்டு ஆளுநர் மாளிகையால் அனுப்பப்பட்ட பொங்கல் அழைப்பிதழ்

அதே நேரத்தில் இந்த அழைப்பிதழ் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஆளுநர் ரவி. கடந்த கடந்த 2022-ம் ஆண்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொங்கல் பண்டிகை அன்று தேநீர் விருந்து அளித்துள்ளார் ரவி. அப்போது, ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றும் தமிழக அரசின் சின்னம் இருந்தது. ஆனால் தற்போது அனுப்பப்பட்டுள்ள பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னமும், தமிழ்நாடு என்ற வார்த்தையும் தவிர்க்கப்பட்டு இந்திய அரசின் அசோகச் சக்கர சின்னமும் தமிழக ஆளுநர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT