எடப்பாடி பழனிசாமி வாக்களித்த பிறகு
எடப்பாடி பழனிசாமி வாக்களித்த பிறகு 
அரசியல்

தேர்தல் திருவிழா துவங்கியது... குடும்பத்துடன் காத்திருந்து வாக்களித்த எடப்பாடி பழனிசாமி!

காமதேனு

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே குடும்பத்துடன் காத்திருந்து தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர்.

தமிழிசை சவுந்தரராஜன்

இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கிய உடனே சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்து  வரிசையில் நின்று வாக்களித்தார். 

அதேபோல தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளி வாக்குசாவடியில்  குடும்பத்துடன் சென்று தனது  வாக்கைப் பதிவு செய்தார். அதேபோல திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனும் வாக்குப்பதிவு மையம் சென்று வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு வாக்களித்தார்.

துரை வைகோ

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மகன்களுடன் வந்திருந்த பிரேமலதா விஜயகாந்த் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். திருச்சி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ கலிங்கப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியும் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று காலையில் வாக்களித்தார். இப்படி அரசியல் பிரபலங்கள் பலரும் காலையிலேயே வந்திருந்து ஜனநாயக் கடமை ஆற்றியுள்ளது ஆரோக்கியமான அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT