வைரமுத்து
வைரமுத்து ‘ஒன்றிய அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பேனா’ - கடலில் பேனா சிலைக்கு வைரமுத்து ஆதரவு!
அரசியல்

‘ஒன்றிய அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பேனா’ - கடலில் பேனா சின்னத்துக்கு வைரமுத்து ஆதரவு!

காமதேனு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா சின்னம் வைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை வரவேற்று கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவொன்றை எழுதியுள்ளார்.

இது குறித்த வைரமுத்துவின் ட்விட்டர் பதிவில், “தமிழர்களை வான்பார்க்கச் செய்த பேனா. கடலையே மை செய்யும் தீராத பேனா. கடற்கரை மணலினும் பெருஞ்சொற்கள் எழுதிய பேனா.

ஒன்றிய அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பேனா. முதல்வரின் திறமைக்கும் பொறுமைக்கும் சாட்சி சொல்லும் பேனா. கலைஞர் பேனா காற்றிலும் எழுதுக” என்று தெரிவித்துள்ளார்.

கடலில் பேனா சிலை அமைக்க திமுக தரப்பில் ஆதரவு தெரிவித்து நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

SCROLL FOR NEXT