அரசியல்

`மக்களுக்கு பம்பர் பரிசு காத்திருக்கு'- சொத்து வரி உயர்வுக்கு ஈபிஎஸ் கிண்டல்

காமதேனு

"தமிழக அரசின் சொத்து வரி உயர்வு வெறும் டிரெய்லர்தான். இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசு காத்திருக்கிறது" என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகளை தமிழக அரசு இன்று திடீரென உயர்த்தியுள்ளது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில், சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியா அரசு தற்போது நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இந்த சொத்து வரி உயர்வு வெறும் டிரெய்லர்தான். இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.

SCROLL FOR NEXT