நிதிஷ் குமார் தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார் தேஜஸ்வி யாதவ் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை: அதிர்ச்சியில் நிதிஷ் குமார்!
அரசியல்

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை: அதிர்ச்சியில் நிதிஷ் குமார்!

காமதேனு

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்துமாறு நிதிஷ் குமார் தலைமையிலான அரசுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும், இறுதி உத்தரவு வரும் வரை அரசு சேகரித்த தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பீகார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், அது மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது போலவும், நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை பாதிக்கும் என்றும் இடைக்காலத் தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் தரவுகளை யாருடனும் பகிரக்கூடாது என்று அது கூறியுள்ளது.

தலைமை நீதிபதி கே வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி மதுரேஷ் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது, மேலும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னதாக, நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கியது. இது அரசியல் ரீதியாக நிதிஷ் - தேஜஸ்வி - காங்கிரஸ் கூட்டணிக்கு கைகொடுக்கும் என நம்பப்பட்டது. தற்போது இந்த தடை காரணமாக நிதிஷ்குமார் கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

SCROLL FOR NEXT