பேரணியில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்... 
அரசியல்

ரெண்டு பேரு நடந்து வந்தும் 200 பேருகூட சேரல!

காமதேனு

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் ஓராண்டு நிறைவு வெற்றியை முன்னிட்டு, நேற்று காரைக்குடியில் பேரணி நடத்தினார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இதில், அவரது மகனும் சிவகங்கை எம்பி-யுமான கார்த்தி சிதம்பரமும் கலந்துகொண்டார்.

இரண்டு முக்கிய தலைகள் கலந்துகொண்ட போதும் பேரணியில் கொடி பிடிக்க 200 பேர்கூட திரட்டமுடிய வில்லையாம். சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ-யும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகக் கச்சைகட்டி நிற்கிறார். சிதம்பரம் நடத்தும் பேரணியில் கலந்துகொண்டால் வீண் பொல்லாப்பு வரும் என்று சொல்லி ராமசாமியின் ஆதரவாளர்கள் பேரணியைக் கண்டுகொள்ளவில்லையாம்.

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 95 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. ஒரு வாக்குச் சாவடிக்கு 10 பேர் வீதம் சிதம்பரத்தால் முன்பு நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் வந்திருந்தாலே பேரணி பெருவெற்றி பெற்றிருக்கும். அவர்கள்கூட பேரணிக்கு வராததால் சிதம்பரமே ஏகத்துக்கும் அப்செட்டாகிப் போனதாகச் சொல்கிறார்கள்.

SCROLL FOR NEXT