அரசியல்

எடப்பாடி பழனிசாமியை முந்திய ஓபிஎஸ்: எதில் தெரியுமா?

காமதேனு

பிரதமர் மோடி நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், ஒருநாள் முன்னதாகவே ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது எடப்பாடி பழனிசாமி தரப்பை யோசிக்க வைத்துள்ளது.

அதிமுக 4 அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோரை பாஜகவும், பிரதமர் மோடியும் இயக்கி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனிடையே, ஒற்றைத் தலைமை பிரச்சினையால் ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டணி உடைந்தது. இருவரும் வேறுவேறு திசையில் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். சசிகலா, டி.டி.வி.தினகரனை அரவணைத்து செல்லும் முடிவுக்கு வந்துவிட்டார் ஓபிஎஸ். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, தன்னுடைய வழி தனி வழி என்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை தனது 72-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிரதமரின் பிறந்தநாளையொட்டி பாஜகவினர் பல்வேறு போட்டிகள், அன்னதானம், சிறப்பு பிரார்த்தனைகள் நடத்த தயாராகிவிட்டனர். இதனிடையே, பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் ஒரு நாளைக்கு முன்னதாகவே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவை உலகில் சக்திவாய்ந்த நாடாக மாற்றும் நோக்கோடு சேவையாற்றி வரும் பிரதமர் மோடி, நல்ல உடல்நலத்துடன், மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT