அரசியல்

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த ஓபிஎஸ் பாதியிலேயே திரும்பினார்: என்ன காரணம்?

காமதேனு

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ். பாதியிலேயே திரும்பிச் சென்றார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதி நிறைவடைவதையொட்டி அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முதல் வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் எம்எல்ஏக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை பதிவு செய்தார். இதனிடையே, தனது வாக்கை பதிவு செய்வதற்காக, மருத்துவமனையில் இருந்து 3 மணிக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் காரில் வந்துள்ளார். அப்போது, கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மாலை 4 மணிக்கு மேல் பி.பி.இ கிட் உடன் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததை அடுத்து, போர் நினைவுச் சின்னம் அருகே வந்த ஓபிஎஸ் திரும்பிச் சென்றார்.

SCROLL FOR NEXT