அரசியல்

எஸ்எஸ்சி தேர்வுகளை இந்தியில் மட்டும் நடத்த திட்டமா? - மத்திய அரசு பதில்

காமதேனு

எஸ்எஸ்சி தேர்வுகளை இந்தியில் மட்டுமே நடத்தும் திட்டம் அரசிடம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேரளாவைச் சேர்ந்த சிபிஎம் உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் எழுப்பிய எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் திட்டமில்லை என தெரிவித்தார்,

மேலும், "எஸ்எஸ்சி தேர்வுகளை இந்தியில் மட்டுமே நடத்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. யுபிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி ஆகியவை மத்திய அரசின் முக்கிய ஆட்சேர்ப்பு ஏஜென்சிகள். இரண்டு கமிஷன்களும் நடத்தும் தேர்வுகளில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் கேள்விகள் கேட்கப்படும். இருப்பினும், மல்டி-டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர் தேர்வின் தாள்-II அனைத்து மொழிகளிலும் நடத்தப்படுகிறது, இது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது”என்று கூறினார்.

அலுவல் மொழிகள் தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மிஸ்ரா, “கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிப்பதற்கான வழிமுறைகள் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உயர் கல்வியில் தாய்மொழி / உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என தெரிவித்தார்

SCROLL FOR NEXT