தனது கோரிக்கையுடன் துவாரகா மதிவதனி
தனது கோரிக்கையுடன் துவாரகா மதிவதனி 
அரசியல்

'இந்தி படிக்க பள்ளிக்கூடம் கட்டித்தாங்க மோடி தாத்தா': கோரிக்கை விடுத்த தமிழ்நாட்டு சிறுமி!

காமதேனு

தனக்கு இந்தி படிக்க ஆசையாக இருப்பதாகவும்,  ஆனால் தங்கள் ஊரில் இந்தி பள்ளிக்கூடம்  இல்லை என்பதால் பள்ளிக்கூடம் கட்டித் தர வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

திருச்சிக்கு வந்த பிரதமரை வரவேற்கும் முதல்வர் ஸ்டாலின்

இந்தி திணிப்புக்கு தமிழ்நாடு எப்போதும் எதிராகவே குரல் கொடுத்துக் கொண்டுள்ளது. அதனால்  தமிழ்நாட்டில் இந்தி பள்ளிக்கூடங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால், இந்தியை நாடு முழுவதும் ஒரே மொழியாக மாற்றிட  மத்திய பாஜக அரசு முனைந்து வருகிறது.

இந்தியை மையமாக வைத்து தமிழகத்தை ஆளும் திமுக,  மத்தியில் அரசாளும் பாஜக ஆகிய  இரண்டு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கும் நிலவி வருகிறது. 

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 'இந்தி தெரியாது போடா' என்ற ஹேஷ்டேக்  மிகப்பெரிய வைரலாக மாறியது. 'இந்தி  தெரியாது போடா' என்ற வாசகங்களைக் கொண்ட ஆடைகளை திமுகவைச் சேர்ந்தவர்களும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்களும் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலையில், இந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி. 

நாகை வடக்குப் பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் விஜயசேகரன். இவர் தமிழ்நாடு காவல்துறையில் கடலோர காவல் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவரது ஏழு வயது மகள் துவாரகா மதிவதனி. வேளாங்கண்ணியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் பிரதமர் மோடி திருச்சிக்கு வந்த நிலையில், அவரைச் சந்திக்க தனது தந்தையுடன் சென்றிருந்தார்.

அங்கு தனது கையில் பதாகை ஏந்தி அதன் மூலம் பிரதமர் மோடிக்கு இந்தி படிப்பதற்குப் பள்ளிக்கூடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். தனக்கு இந்தி படிக்க ஆசையாக இருப்பதாகவும், ஆனால் தங்கள் ஊரான நாகப்பட்டினத்தில் இந்தி படிக்க அரசு பள்ளிக்கூடங்கள் இல்லை என்பதால் இந்தி படிப்பதற்காக அரசுப் பள்ளிக்கூடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தனது தந்தை இடம் ஒதுக்கி தருவார்,  அதில் கட்டிக் கொடுத்தால் போதும் என்றும் அந்த சிறுமி கோரிக்கை விடுத்திருக்கிறார்.  சிறுமியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பிரதமர் விழாவில் சர்ச்சையை கிளப்பிய முதல்வர்... கொந்தளிக்கும் பாஜக!

அடம்பிடிக்கும் காங்கிரஸ்... கறார் காட்டும் திமுக... கூட்டணியில் திடீர் சிக்கல்!

இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பன் கொலை... 3 மாதம் கழித்து கொலையாளி கைது!

அரசியலிலும் அவர் கேப்டன்... விஜயகாந்துக்கு பிரதமர் மோடி புகழாரம்!

13 வயதில் நடந்த பாலியல் தொல்லை... மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT