ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் தேர்தல் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் தேர்தல் பிரச்சாரம்  
அரசியல்

அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி, கூட்டணி சார்பில் மனு

காமதேனு

நாம் தமிழர் கட்சியினர் மீது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை தடுத்து நிறுத்தக் கோரி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி மற்றும்  அதன் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து  மனு அளித்துள்ளன. 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும்  நாம் தமிழர் கட்சியை தமிழ்த்தேசிய தன்னுரிமை கட்சி, தமிழர் நலப் பேரியக்கம், மருது மக்கள் இயக்கம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட 21  அமைப்புக்கள் ஆதரிக்கின்றன. அவை ஒன்றிணைந்து  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக தேர்தல் களத்தில் செயல்படுகின்றன. அந்த கூட்டமைப்பின்  சார்பாக ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான தேர்தல் அலுவலரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில்,  'நாம் தமிழர் கட்சி மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்யான அவதூறு பரப்புரைகளைத் தடுக்க வேண்டும். அவதூறுகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் புகார்களை நம்பி நாம் தமிழர் கட்சி மீது எடுக்கும் பாரபட்சமான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.  பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கும் திமுக, அதிமுக கட்சிகள் மீதும், அவை ஆதரிக்கும் வேட்பாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கைகள்  முன் வைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT