முத்தரசன் - மோடி  
அரசியல்

மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் உயருகிறது... கிண்டலடிக்கும் முத்தரசன்!

காமதேனு

"தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி ஒவ்வொரு முறை வரும்போதும், இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது" என்று சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தஞ்சாவூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், வாக்குசேகரிப்புக்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்த அவர், "சர்வாதிகாரம், பாசிசத்துக்கு எதிரான போர் நடக்கிறது. இதில், இந்தியா கூட்டணி முன்னேறி வருகிறது. நம் நாட்டின் ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையைக் காப்பாற்றும் பொறுப்பை இந்தியா கூட்டணி ஏற்றுள்ளது. தமிழ்நாட்டுக்கு மோடி எத்தனை முறை வந்தாலும், மக்கள் ஏமாறமாட்டார்கள். அவர் ஒவ்வொரு முறை வரும்போதும், இந்தியா கூட்டணிக்கான வாக்கு வங்கி விகிதம் அதிகரித்து வருகிறது.

அமித்ஷாவுடன் பிரதமர் மோடி

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது எனக் கேட்டால், கச்சத்தீவு பிரச்சினையை பேசுகிறார் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த மோடி கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், இப்போது பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக பேசி வருகிறார். அரசமைப்புச் சட்டம் முழுவதையும் மோடியும், அமித் ஷாவும் மீறுவது மட்டுமல்லாமல், அதை சீரழித்துவிட்டனர். அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றில் பணியாற்றுபவர்களைத் தங்களது வீட்டு ஏவலாளிகளைப் போன்று பயன்படுத்துகின்றனர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றின் வங்கிக் கணக்குகளை முடக்கி விட்டனர்.

முத்தரசன்.

ஜெர்மனியின் ஹிட்லர் போன்று இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் முடக்கி வருகிறார் மோடி. இந்தியாவின் ஹிட்லர் போன்று செயல்படும் இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்து தேர்தலே இருக்காது. எனவே, இந்தத் தேர்தல் யுத்தத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

இதையும் வாசிக்கலாமே...   

பிரபுதேவா பாட்டுக்கு நடனமாடி அசத்திய ராஜமெளலி...வைரலாகும் வீடியோ!

வைகோ மருமகன் பாஜகவில் இணைந்தார்... மதிமுகவினர் அதிர்ச்சி!

6 நிமிஷ வீடியோவுக்கு ரூ.60 கோடி செலவு... மாஸ் காட்டும் ‘புஷ்பா2’

அந்தரங்க வீடியோ வெளியாகி அதிர விட்ட நடிகை.... பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு!

குடிபோதையில் ஓட்டுநர்... பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 5 மாணவர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT