மோடி - நவாஸ் கனி  
அரசியல்

மதத்தை வைத்தே தேர்தல் பிரச்சாரம் செய்கிறது பாஜக - எம்.பி. நவாஸ் கனி குற்றச்சாட்டு!

சந்திரசேகர்

மதத்தை வைத்து மட்டுமே அரசியலை சந்திக்க முடியும் என்ற கோட்பாட்டில் பல மாநிலங்களில் பலவிதமான பிரச்சாரங்களை பாஜகவினர் செய்து வருவதாக ஐயூஎம்எல் கட்சியின் எம்.பி. நவாஸ் கனி குற்றம்சாட்டியுள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதில் அரசு சார்பில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். மற்றவர்கள் தனியார் ஏற்பாட்டு மூலம் செல்கின்றனர். இந்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் நாளை தொடங்க உள்ள நிலையில், அதற்கு செல்வோருக்கான பயிற்சி முகாமும், வழியனுப்பும் நிகழ்ச்சியும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி

இதில், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, தமிழ்நாட்டு ஹஜ் கமிட்டி தலைவர் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. நவாஸ் கனி, "நம்முடைய பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் பதற்றத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார். தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி, இஸ்லாமியர்களை என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம் மன்னர்களை எல்லாம் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.‌ மதத்தை வைத்து மட்டுமே அரசியலை சந்திக்க முடியும் என்ற கோட்பாட்டிலே பல மாநிலங்களில் பலவிதமான பிரச்சாரங்களை பாஜகவினர் செய்து வருகின்றனர். பாஜகவின் எந்த ஒரு திட்டமும் கை கொடுக்காது.

சாம் பித்ரோடா

காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்று அவர்களுக்கே தெரியும். அதனால்தான் இது போன்ற பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். நிறத்தை பற்றி பேசிய காங்கிரஸ் பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்து விட்டார்கள். அதற்குப் பிறகு அதை ஏன் கேட்க வேண்டும். நாங்கள் கேட்டிருந்தால் ஏன் நடவடிக்கை இல்லை என கேட்டிருப்போம். அதற்கு முன்னதாக அவர்களே நடவடிக்கையை எடுத்து விட்டார்கள்" என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!

ஓடுபாதையில் விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!

கையில் கட்டுடன், கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

பெரும்பான்மை கிடைக்கலைன்னா பாஜகவின் ‘பிளான் பி’ என்ன? - அமித் ஷா அட்டகாச பதில்!

அஞ்சலி கொலையில் திடீர் திருப்பம்... ஓடும் ரயிலிலிருந்து குதித்த குற்றவாளி!

SCROLL FOR NEXT