அரசியல்

‘எனது ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது’ - அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட ட்வீட்!

காமதேனு

இன்று காலையில் ஹேக் செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, சுயவிவரத்தில் அவரின் பெயர் இப்போது காண்பிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “அன்புள்ள அனைவருக்கும், எனது ட்விட்டர் கணக்கு இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உங்கள் அக்கறைக்கும் அன்பான ஆதரவிற்கும் நன்றி. மாநில சைபர் கிரைம் பிரிவு, ட்விட்டர் அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார்

முன்னதாக, செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கின் பெயர் இன்று காலையில் திடீரென வேரியோரியஸ் என்ற மாறியது. மேலும், ஒரு கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரமும் அவரது ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டது. அதில், “ எனவே நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உருவாக்கினோம். அனைத்து பணமும் ஹெல்பிண்டியா நிறுவனத்துக்கு அனுப்பப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான லிங்க்-கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஃபாலோயர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது தொடர்பாக சைபர் கிரைம் மற்றும் ட்விட்டரில் புகாரும் அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT