அரசியல்

‘இது பதவி அல்ல கடமை’ - புதிய பதவியினை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!

காமதேனு

தமிழ்நாட்டின் பாரத சாரணர், சாரணியர் இயக்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு,க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயின்ற எம்.சி.சி பள்ளியில், கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்ட கலை அரங்கத்தில் தமிழ்நாடு பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தின் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுப் பதவியேற்றுக்கொண்டேன். பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்ற போது அடைந்த பெருமை இப்போதும் எனக்கு ஏற்பட்டது.

‘இது உனக்குப் பதவி அல்ல! கடமை என்று நினைத்துச் செயல்பட வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எனக்கு இதைச் சொன்னார்' என்றார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில் அனைத்து பள்ளிகளிலும் சாரண சாரணியர் இயக்கத்தைக் கொண்டு சேர்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT