ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பி  
அரசியல்

‘பாஜகவின் இந்த வன்முறை அரசியல் ஆபாசமானது’ - சீறும் ஜோதிமணி எம்.பி

காமதேனு

தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தமிழகத்தில் பல்வேறு எதிர் விளைவுகளை உண்டாக்கியுள்ளது. பலரும் இதனை வன்மையாக கண்டித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். அவரது கார் மீது செருப்பு வீசப்பட்டது. அமைச்சரின் காரை முற்றுகையிட்ட பாஜகவினர் காரை விரட்டிச் சென்றனர். அந்த செயலில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜகவினரின் செயலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். ' தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை தாக்க முயன்ற தமிழக பாஜகவிற்கு கடுமையான கண்டனங்கள். பாஜகவின் இந்த வன்முறை அரசியல் ஆபாசமானது. அருவருக்கத்தக்கது. ஒரு மாநில அமைச்சரிடமே இவ்வளவு வன்முறையில் பாஜகவினர் ஈடுபடுவார்கள் என்றால் சாதாரண மக்களின் கதி என்ன?. தமிழக அரசு பாஜகவின் இந்த வன்முறை அரசியலை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்' என்று ஜோதிமணி தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT