அரசியல்

புதியவர்களுக்கு வாய்ப்பு: அதிரடியாக அமைச்சரவையை மாற்றினார் மம்தா பானர்ஜி!

காமதேனு

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கு அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் மம்தா பானர்ஜி. இதில் ஐந்து புதிய முகங்கள் உட்பட 9 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் மேற்குவங்க அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். மம்தாவின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சுப்ரதா முகர்ஜி, சாதன் பாண்டே ஆகியோர் உயிரிழந்தனர். எனவே புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. அவர்களுக்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

தற்போது புதிதாக அமைச்சராக பதவியேற்றவர்களில் பாஜகவின் முன்னாள் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ முக்கியமானவர். இவர் கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.

பாபுல் சுப்ரியோவுடன் சினேகாஷிஷ் சக்ரவர்த்தி, பார்த்தா பௌமிக், உதயன் குஹா, பிரதீப் மஜூம்டர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பிர்பஹா ஹன்ஸ்தா, பிப்லாப் ராய் சவுத்ரி, தஜ்முல் ஹொசைன் மற்றும் சத்யஜித் பர்மன் ஆகியோர் புதுமுக அமைச்சர்கள்.

இது தொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் அமைச்சர்கள் சுப்ரதா முகர்ஜி, சாதன் பாண்டே ஆகியோரை இழந்தோம். பார்த்தா சிறையில் இருக்கிறார், அதனால் அவர்களின் அனைத்து வேலைகளும் செய்யப்பட வேண்டும். என்னால் தனியாக சமாளிக்க முடியாது. இதனால் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்" என்று அவர் கூறினார்.ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் மேற்குவங்க அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். மம்தாவின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சுப்ரதா முகர்ஜி, சாதன் பாண்டே ஆகியோர் உயிரிழந்தனர். எனவே புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. அவர்களுக்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

தற்போது புதிதாக அமைச்சராக பதவியேற்றவர்களில் பாஜகவின் முன்னாள் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ முக்கியமானவர். இவர் கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.

பாபுல் சுப்ரியோவுடன் சினேகாஷிஷ் சக்ரவர்த்தி, பார்த்தா பௌமிக், உதயன் குஹா, பிரதீப் மஜூம்டர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பிர்பஹா ஹன்ஸ்தா, பிப்லாப் ராய் சவுத்ரி, தஜ்முல் ஹொசைன் மற்றும் சத்யஜித் பர்மன் ஆகியோர் புதுமுக அமைச்சர்கள்.

இது தொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் அமைச்சர்கள் சுப்ரதா முகர்ஜி, சாதன் பாண்டே ஆகியோரை இழந்தோம். பார்த்தா சிறையில் இருக்கிறார், அதனால் அவர்களின் அனைத்து வேலைகளும் செய்யப்பட வேண்டும். என்னால் தனியாக சமாளிக்க முடியாது. இதனால் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT