கமலேஷ் பிரதாப் ஷா
கமலேஷ் பிரதாப் ஷா  
அரசியல்

அதிர்ச்சி... காங்கிரஸில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த ஷா பாஜகவில் ஐக்கியம்!

காமதேனு

மத்தியப்பிரதேச காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கமலேஷ் பிரதாப் ஷா, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

கமல்நாத்

மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரான கமல்நாத்தின் கோட்டையான சிந்த்வாரா மாவட்டத்தின் அமர்வாடா தொகுதியில் இருந்து கமலேஷ் பிரதாப் ஷா காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவராவார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஷா, தனது மனைவி மற்றும் சகோதரியுடன் பாஜகவில் நேற்று இணைந்தார்.

கமலேஷ் பிரதாப் ஷா

போபாலில் உள்ள முதல்வர் மாளிகையில் முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் மற்றும் பாஜக தலைவர்கள் முன்னிலையில் ஷா இணைந்தார். அவருடன் ஹர்ராய் நகர் பாலியகாவின் தலைவரான அவரது மனைவி மாதவி ஷா, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான அவரது சகோதரி கேசர் நெதம் ஆகியோரும் பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த 2013, 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக ஷா இருந்துள்ளார். சிந்த்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டமன்றத்தின் ஏழு இடங்களும் காங்கிரஸிடம் இருந்தன, ஆனால், தற்போது அக்கட்சி அவற்றில் ஒன்றை பாஜகவிடம் இழந்துள்ளது. சிந்த்வாரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏக்களில் கமல்நாத்தும் ஒருவர். அவரது மகனும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான நகுல் நாத், மக்களவைத் தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT