அரசியல்

கேள்விகளைக் கண்டு அஞ்சுகிறார் பிரதமர் மோடி: ராகுல்காந்தி கடும் விமர்சனம்!

காமதேனு

ஜனநாயகக் கோவிலில் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆனால் சர்வாதிகாரிகளை எப்படி எதிர்த்துப் போராடுவது எப்படி என எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் குறித்து கேள்வி கேட்டதற்காக 57 எம்.பி.க்களை கைது செய்து, 23 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்வீட் மூலமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி இந்தியில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ரூ 1053க்கு சிலிண்டர் விலை ஏன்? தயிர், தானியங்களுக்கு ஜிஎஸ்டி ஏன்? கடுகு எண்ணெய் ஏன் ரூ.200? பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து கேள்விகள் கேட்டதற்காக 57 எம்.பி.க்களை 'ராஜா' கைது செய்து, 23 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தார். ஜனநாயகக் கோயிலில் கேள்விகளுக்கு ராஜா பயப்படுகிறார். ஆனால் சர்வாதிகாரிகளை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்" என அவர் தெரிவித்துள்ளார்

விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் ஜிஎஸ்டி உயர்வு குறித்து அவசர விவாதம் நடத்தக் கோரி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கி வருகின்றனர். இதன் காரணமாக நேற்று 19 எம்.பிக்களும், நேற்று முன் தினம் 4 எம்.பிக்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT