கேரளா   அமைச்சர் பி.ராஜீவ்
கேரளா அமைச்சர் பி.ராஜீவ்  
அரசியல்

அதிகாரிகள் தவறு செய்தால் அபராதம் விதிக்கும் ஒரே மாநிலம் கேரளம்: அமைச்சர் பெருமிதம்

காமதேனு

இந்தியாவிலேயே அதிகாரிகள் தவறுசெய்தால் அபராதம் விதிக்கும் ஒரே மாநிலம் கேரளம் தான் என அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார்.

கேரள மாநிலம் ஹரிபாசு பகுதியில் உள்ள எஸ்.கே.நோயறிதல் மையத்தை தொடங்கிவைத்து அமைச்சர் ராஜீவ் பேசுகையில், “கேரளத்தில் தொழில் முனைவோரால் 7600 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 24 சதவீதம் உணவுத்துறையிலும், 16 சதவீதம் ஆடைத்துறையிலும் உள்ளது. இதில் 38 சதவீதம் பெண் தொழில் முனைவோர்.தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும் என்பதால் அதிகாரிகளுக்கு 50 கோடி வரையிலான முதலீட்டிற்கு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும். லைசென்ஸ் இல்லாமல் மூன்று ஆண்டுகள் வரை இயங்கலாம் எனவும் அறிவித்துள்ளோம்.

மேலும், தொழில் தொடங்க விண்ணப்போரிடம் 15 நாள்களுக்குள் முடிவெடுக்காவிட்டாலோ, அதன்பேரில் தவறு நடந்தாலோ சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டசபையில் சட்டம் இயற்றியுள்ளோம்.  விண்ணப்பித்த கால அளவில் இருந்து 15 நாள்களுக்குள் தொழில் முனைவோரின் விண்ணப்பத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி 250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இந்த அபராதத்தை 10 ஆயிரம் வரை விதிக்க முடியும். நாட்டிலேயே தவறு செய்யும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும்படி சட்டம் இயற்றிய முதல் மாநிலம் கேரளா ”என பெருமிதத்தோடு சொன்னார். 

SCROLL FOR NEXT