அரசியல்

கேரள ஆளுநரின் முகநூல் கணக்கு முடக்கம்: அரபு எழுத்துக்களுடன் வீடியோ வெளியீடு

காமதேனு

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் ஃபேஸ்புக் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநரின் முகநூல் கணக்கு முடக்கம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் ஆரிப் முகமது கான், "எனது பேஸ்புக் பக்கம் இன்று காலை முதல் ஹேக் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டு, பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் சமூக ஊடக தளங்களில் புகார் அளித்து பல மணிநேரம் ஆகியும், ஆணுநர் ஆரிப் முகமது கானின் கணக்கில் உள்ள ஹேக்கர் பதிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. அந்த பக்கத்தில் ஹார்டுவேர் மற்றும் கட்டுமானம் தொடர்பான வீடியோ பதிவுகள், அரேபிய எழுத்துக்களுடன் பதிவாகியுள்ளது. கணக்கை மீட்டெடுக்க நேரம் எடுக்கும் என்று கேரள ராஜ்பவனில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT