அரசியல்

ஆடிட்டர் கைது எதிரொலி: முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் திடீர் மனு

காமதேனு

விசா முறைகேடு வழக்கில் தனது ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகத்திலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சிபிஐ அண்மையில் சோதனை நடத்தியது. சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூபாய் 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும், ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக விசா பெறப்பட்டதாகும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தது. கைது செய்யப்பட்டுள்ள ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். பாஸ்கர ராமனிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT