அரசியல்

‘திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடைபெறும்’- தமிழக அரசு அறிவிப்பு!

காமதேனு

``அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்'' எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும்  பொங்கல் பண்டிகையின் போது கொண்டாடப்படுவது வழக்கம். மதுரை உள்ளிட்ட பல்வேறு தென்மாவட்டங்களில் இது பெரும் விழாவாகக் கொண்டாடப்படும். ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி அதற்குத் தடை விதிக்க வேண்டும் என பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.

இந்நிலையில் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்  எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்திலும், 15-ம் தேதி பாலமேடு பகுதியிலும்,  16-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT