அமைச்சர்களுடன் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்
அமைச்சர்களுடன் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
அரசியல்

தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

காமதேனு

ஏப்ரல் 11-ம்தேதி அரசுக்கு எதிராக நடத்த இருந்த போராடத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அமைச்சர்களுடனானப் பேச்சுவார்த்தைக்குப் பின் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2-ம் தேதி நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஏப்.11-ம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகை பேரணி நடத்துவது என அறிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் உள்ளிட்டோரை ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி அமைச்சர்கள் எங்களுடன் நீண்ட நெடிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் நடந்த பேச்சுவார்த்தை போன்று இல்லாமல் விரிவான அறிக்கையுடன் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அதற்கான தீர்வு காண்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். மேலும் நாங்கள் நடத்த உள்ள போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டார்கள் அதன் அடிப்படையில் போராடத்தை தற்காலிகமாக நாங்கள் ஒத்தி வைப்பதாக முடிவு செய்துள்ளோம் ‘’ என்றனர்.

SCROLL FOR NEXT