நடிகை குஷ்பூ
நடிகை குஷ்பூ பிரதமருக்கு எதிராக பேசுவது ஆணவத்தின் உச்சம் - கெஜ்ரிவாலுக்கு எதிராக கொந்தளிக்கு நடிகை குஷ்பூ
அரசியல்

இது ஆணவத்தின் மொத்த உருவம்: கேஜ்ரிவாலுக்கு எதிராக கொந்தளிக்கும் நடிகை குஷ்பூ

காமதேனு

மக்கள் அவதிப்படுவதை புரிந்துக் கொள்ள நாட்டின் பிரதமர் படித்தவராக இருந்திருக்க வேண்டுமென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதற்கு நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 30-ம் தேதியுடன் இரண்டாயிரம் ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

அந்த வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’இரண்டாம் ஆயிரம் நோட்டுகள் கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்று முதலில் பிரதமர் கூறினார். இப்போது இரண்டாம் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். அதனால்தான் கூறுகிறேன் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும்.

படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பொதுமக்கள் அவதிப்படுவது அவருக்கு புரிவதில்லை" என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.

பிரதமர் குறித்து இப்படி பேசுவது முறையல்ல என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து குஷ்பு கூறுகையில், 'கேஜ்ரிவாலின் இந்த ஆணவத்தின் மொத்த உருவத்தையும் காட்டுகிறது. அரசியல் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் பிரதமர் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT