கடலூரில் திமுக மேயர் சுந்தரி ராஜா வீட்டில் வருமானவரித்துறை சோதனை
கடலூரில் திமுக மேயர் சுந்தரி ராஜா வீட்டில் வருமானவரித்துறை சோதனை 
அரசியல்

பணப்பட்டுவாடா புகார்; திமுக மேயர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

காமதேனு

பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரின் பேரில் கடலூரில் திமுக மேயர் வீட்டில் வருமானவரித்துறை என சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு படம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் மட்டுமின்றி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவையும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் மேயர் சுந்தரி ராஜா

கடலூர் மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த சுந்தரி ராஜா மேயராக பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் ராஜா, திமுகவின் மாநகர செயலாளர் பதவி வகித்து வருகிறார். இவர்களது வீடு திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இவரது வீட்டிற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஏராளமான திமுகவினர் திரண்டு வருவதால் போலீஸார் குவிப்பு

இந்த புகாரின் பேரில் இன்று மதியம் வருமானவரித்துறை அதிகாரிகள் 6க்கும் மேற்பட்டோர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் பரவியதும் ஏராளமான திமுகவினர் மேயர் வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது பேசிய மாநகர செயலாளர் ராஜா, காழ்ப்புணர்ச்சி காரணமாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT