அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன் hindu கோப்பு படம்
அரசியல்

சமூகநீதியில் அக்கறையுள்ள திமுக ஏன் பழங்குடியின ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கவில்லை?: துரைமுருகன் பதில்

காமதேனு

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கும் திட்டத்தால் தமிழக அரசுக்கு தினமும் பலகோடி நஷ்டம். ஆனாலும் அந்தத் திட்டத்தை தொடர்ந்து வருகிறோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி தேர்தலில் ஏன் பழங்குடியின வேட்பாளருக்கு ஆதரவு தரவில்லை எனவும் அவர் விளக்கியுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி மெட்டுகுளம் கிராமத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இணைப்பு விழா மேடையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கிவருகிறோம். இதனால் தினமும் பலகோடி நஷ்டம் ஏற்படுகிறது. இருந்தும், இந்தத் திட்டத்தை செயல்படுத்திவருகிறோம். நான் அமைச்சர், எம்.எல்.ஏ என மக்கள் பிரதிநிதித்துவ பதவியில் இத்தனை ஆண்டுகள் இருந்தாலும், மது அருந்தும் பழக்கம் இல்லை. அப்படித்தான் அனைவரும் இருக்க வேண்டும்.”என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “காவிரி விஷயத்தில் கர்நாடகா சொல்வதும், காவிரி மேலாண்மை வாரியம் சொல்வதும் தவறு. சுற்றுச்சூழல் துறை மேகதாது அணை விவகாரத்தை நீக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என கூறினார். ஜனாதிபதி தேர்தலில் திமுக யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கிறது என்ற அவரிடம், நிருபர்கள் சமூகநீதியில் அக்கறையுள்ள திமுக, ஏன் பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்கவில்லை எனக் கேட்டனர். அதற்கு துரைமுருகன், “பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி திமுகதான். ஆனால் எங்களிடம் அவர்கள் ஆதரவு கேட்கவில்லையே!”என தனக்கே உரியபாணியில் கூலாக சொன்னார் துரைமுருகன்

SCROLL FOR NEXT