ஈபிஎஸ்
ஈபிஎஸ் 
அரசியல்

‘அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர்’ - தீர்ப்புக்குப் பின்னர் ட்விட்டர் சுயவிவரத்தை மாற்றிய ஈபிஎஸ்!

காமதேனு

ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என இன்று வெளியான நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என ட்விட்டரில் தனது சுயவிவரத்தை மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து இன்று இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த ஈபிஎஸ் தனது ட்விட்டர் சுயவிவரப் பக்கத்தில் ‘ அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர்’ என குறிப்பிட்டுள்ளார். இதனை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும்’ என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பு, விரக்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு செல்லாது என தீர்ப்பு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த தீர்ப்பின் மூலம் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பதால், அவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி இதை கொண்டாடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT