அரசியல்

அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் ரத்து?

காமதேனு

பொதுப்பணித்துறையில் அதிமுக ஆட்சியின் இறுதியில் விடப்பட்ட முக்கியமான சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு புதிதாக டெண்டர்கள் விடப்படுகிறதாம். சென்னையில் உள்ள கலசமஹால் புதுப்பிக்கும் பணிக்காக அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டதாம். அதற்கான பணிகளை முடிக்க இன்னும் ஓர் ஆண்டுகள் அவகாசம் இருக்கும் நிலையில், அதனை ரத்து செய்து மீண்டும் புதுப்பிக்கும் பணியை வேறு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளாராம் துறையின் மூத்த அதிகாரி.

இதனால் அரசுக்கு கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக துறையில் உள்ளவர்களே புலம்புகிறார்கள். இந்த ரீ டெண்டர் விவகாரத்தை தோண்டி எடுத்திருக்கும் தன்னார்வ இயக்கம் ஒன்று, விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கி இருப்பதுடன் நீதிமன்றத்திலும் நியாயம் கேட்கப் போகிறதாம். இதை எல்லாம் துறை அமைச்சரின் கவனத்துக்கும் சிலர் கொண்டு சென்றார்களாம். ஆனால், ”இதுல நான் பண்றதுக்கு என்ன இருக்கு?” என கைவிரித்துவிட்டராம் அமைச்சர்!

SCROLL FOR NEXT