கேரள பயணத்தில்...
கேரள பயணத்தில்... 
அரசியல்

ஒற்றுமை நடைபயணத்திற்கு ஒருநாள் பிரேக்!

காமதேனு

ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தற்போது கேரளத்தில் தொடர்கிறார். அவருடன் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த தேர்வுசெய்யப்பட்ட 118 காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் செல்கிறார்கள். தமிழகத்திலிருந்தும் மூன்று பேர் ராகுலுடன் தொடர் பயணத்தில் இருக்கிறார்கள். ராகுல் உள்பட தொடர் பயணத்தில் இருக்கும் அனைவருமே தற்போது பயணக் களைப்பில் இருக்கிறார்களாம். சிலபேர் உடல் உபாதைகளிலும் அவதிப்பட்டு வருகிறார்களாம். இந்த நிலையில், செப்டம்பர் 23-ம் தேதி ஒருநாள் மட்டும் நடைபயணத்தை ஒத்திவைத்திருக்கிறாராம் ராகுல். அன்று ஒருநாள் மட்டும் டெல்லி சென்றுவிட்டு திரும்பும் ராகுல், 24-ம் தேதியிலிருந்து பயணத்தைத் தொடர்வார் என்கிறார்கள்.

மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் ராகுலின் நடைபயண தொடக்க நிகழ்வுக்கு நேரில் வராமல் கடிதம் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார் சோனியா. இந்நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து திரும்பியிருக்கும் அன்னையைப் பார்த்து நலம் விசாரிப்பதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும் ஒருநாள் பயணமாக ராகுல் காந்தி டெல்லி செல்வதாக சொல்லப்படுகிறது. எனினும் நடைபயணத்தால் ஏற்பட்டிருக்கும் களைப்பைப் போக்கிக் கொள்ளவும் இந்த பிரேக்கை அவர் எடுத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

SCROLL FOR NEXT