பினராயி விஜயன்
பினராயி விஜயன் 
அரசியல்

வடக்கர்களை வளைக்கும் பினராயி விஜயன்!

காமதேனு

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்வரிசையில் நிற்பது ஊரறிந்த செய்திதான். இந்நிலையில், கேரளத்தில் பணிசெய்யும் வட மாநிலத் தொழிலாளர்களை மலையாளத்தில் முழு எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றும் திட்டத்தைத் துவக்குகிறார் பினராயி விஜயன். இன்று மாலையில் அவரே தொடக்கி வைக்கும் இந்தத் திட்டத்திற்கு ’விருந்தினர் தொழிலாளர்களை மலையாள மொழியில் முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களாக்கும் திட்டம்’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.

கேரளத்தில் இருக்கும் வடமாநிலத் தொழிலாளர்களில் பலரும் இங்கேயே நிரந்தரக் குடிகளாகி ரேஷன் கார்டு, வாக்குரிமை உள்ளிட்டவற்றை பெற்றுவிட்டனர். தேர்தலில் இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தாமரையும், மோடியும் தான். இவர்களை திசைதிருப்பவே இந்தத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறாராம் பினராயி. வடக்கர்களுக்கு கேரளத்தின் கலாச்சாரத்தை உணர்த்துவதுடன் வடக்கே இருக்கும் மக்களைவிட கேரளம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதை உணர்த்துவதும் தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாம். மலையாளம் படிக்கவைத்துவிட்டால் வடக்கு மக்களை மோடி மாயையிலிருந்து இலகுவாக மீட்டுவிடலாம் என்பதும் இந்தத் திட்டத்தின் பின்னால் மறைந்திருக்கும் தோழர்களின் கணக்காம்.

SCROLL FOR NEXT