அரசியல்

ஈரோடு கிழக்கு; தாமரை சின்னத்தில் யுவராஜா?

காமதேனு

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இன்னொரு மகன் சஞ்சய் சம்பத் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இரட்டை இலைக்கு சிக்கல் வரலாம் என யோசிக்கிறார்களாம். அதனால் இடைத் தேர்தலிலும் தமாகாவுக்கே தொகுதியைத் தந்துவிடலாம் என தந்திரமாக யோசிக்கிறாராம் ஈபிஎஸ்.

இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தையை வாசனிடம் ஈபிஎஸ் தரப்பு தொடங்கி இருக்கிறது. இம்முறையும் தமாகா வேட்பாளராக, தானே களமிறங்க வேண்டும் என்பதில் விடப்பிடியாக இருக்கிறாராம் யுவராஜா. அதேசமயம், தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கி யுவராஜா தான் வேட்பாளர் என்றால் அவரை தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜக தரப்பில் ஒரு மூவ் எடுப்பதாகச் சொல்கிறார்கள். இதனிடையே, தேர்தல் பணிகளை ஆளுக்கு முன்னதாகத் தொடங்கி இருக்கும் ஓபிஎஸ், தனது தரப்பில் வேட்பாளரை நிறுத்தி தனக்குச் சாதகமாக அதிமுக வாக்குகளைப் பிரித்துக் காட்டும் யோசனையிலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது!

SCROLL FOR NEXT