அசோக் கெலாட்
அசோக் கெலாட் 
அரசியல்

ப.சிதம்பரத்தை சாட்சிக்கு இழுத்த கெலாட்!

காமதேனு

ஒருவருக்கு ஒரு பதவி என ராகுல் கொளுத்திப் போட்ட நெருப்பால் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான ரேஸிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். ராஜஸ்தான் முதல்வர் பதவியும் தனக்கே வேண்டும் என பிடிவாதம் பிடித்த கெலாட், “ஒருவருக்கு ஒரு பதவி... ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்றெல்லாம் மே மாதம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர்கள் அமர்வில் நாம் பேசியது உண்மைதான். ஆனால், அதற்குப் பிறகுதானே ப.சிதம்பரத்துக்கு ராஜ்ய சபா எம்பி கொடுத்தோம். அவரது மகன் லோக் சபாவிலும் அவர் ராஜ்ய சபாவிலும் இப்போது எம்பி-யாக இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என உதய்பூரில் தீர்மானம் போட்டுவிட்டு அதை மீறவில்லையா? சிதம்பரத்துக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?” என கேள்வி எழுப்பினாராம்.

உதய்பூர் சிந்தனையாளர் அமர்வு...

கெலாட் ஒதுங்கிக் கொண்டதால் இதுவரை லிஸ்ட்டிலேயே இல்லாத ப.சிதம்பரத்தின் பெயரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு இப்போது அடிபட ஆரம்பித்திருக்கிறது. “இந்திரா காந்தி குடும்பம் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி காந்தியை கைவிட்டதாகவோ ஒதுக்கிவிட்டதாகவோ அர்த்தம் இல்லை” என பேச ஆரம்பித்திருக்கிறார் சிதம்பரம்.

ப.சிதம்பரம்

அப்பாவுக்கும் சான்ஸ் அடிக்கலாம் என்பதால், இதுவரை ராகுலின் நடவடிக்கைகளுக்கு மாற்றுக் கருத்து சொல்லிவந்த கார்த்தி சிதம்பரமும் இப்போது ராகுல் பெருமை பேச ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கணக்கு இப்படி இருந்தாலும் சோனியா குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய, கட்சியின் பொருளாளரான பவன் குமார் பன்சாலின் பெயரும் தலைவர் பதவிக்கு பலமாக அடிபடுகிறது. இதனிடையே, மூத்த தலைவரான திக் விஜய் சிங் நாளை தனது வேட்பு மனுவை தாக்கச் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

SCROLL FOR NEXT