குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பூபேந்திர படேல்
குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பூபேந்திர படேல் 
அரசியல்

குஜராத்தின் முதல்வர் யார்? - பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு!

காமதேனு

இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மீண்டும் குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் தேர்வாகியுள்ளார்.

குஜராத்தில் இமாலய தேர்தல் வெற்றிக்குப் பிறகு ராஜினாமா செய்த குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மீண்டும் அந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பூபேந்திர படேலின் பெயரை கானு தேசாய் முன்மொழிந்தார்.

முதல்வர் பதவிக்கான தலைவரை தேர்வு செய்வதற்காக குஜராத் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் கூட்டம் காந்திநகரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பார்வையாளர்கள் ராஜ்நாத் சிங், பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பூபேந்திர படேல் திங்கள்கிழமை பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 182 சட்டமன்றத் தொகுதிகளில் 156 இடங்களை பாஜக கைப்பற்றியது. இதற்கு முன் 1985ல் காங்கிரஸ் கட்சி மாதவ் சிங் சோலங்கி தலைமையில் 149 இடங்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.

SCROLL FOR NEXT