திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன்
திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன்  கமிஷன் தொகைக்கு ஜிஎஸ்டி தந்துடணும்: வைரலாகும் திமுக மாநகர செயலாளரின் வீடியோ
அரசியல்

கமிஷன் தொகைக்கு ஜிஎஸ்டி தந்துடணும்: வைரலாகும் திமுக மாநகர செயலாளரின் வீடியோ

காமதேனு

ஊரக வளர்ச்சி முகமை சாலைப்பணி உங்களுக்கு கிடைக்க சொல்கிறேன். பலருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்பதால், நடக்கும் பணிகளுக்கு 18 சதவீதம், அதற்கு ஜிஎஸ்டியும் கமிஷனாக கொடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் எதிர்புறம் இருப்பவர் தன் செல்போனில் வீடியோ கேமிராவை ஆன்செய்து பாக்கெட்டில் போட்டு உள்ளார். இது தெரியாமல் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் பேசுகிறார். அதில், “ஊரக வளர்ச்சி முகமை சாலைப்பணி உங்களுக்கு கிடைக்க சொல்கிறேன். எல்லாம் ஒகே ஆகிவிட்டால் 18 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும். அந்த 18 சதவீதத்திற்கு ஜிஎஸ்டியும் கொடுக்க வேண்டும். இதற்கு நெல்லை மாவட்டத்திற்கு ராஜகண்ணப்பன் தான் பொறுப்பு அமைச்சர். அவருக்கு அந்த 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதம் கொடுக்க வேண்டும். நெல்லை தொகுதியில் வேலை வேண்டும் என்றால் நீங்கள் எப்போதும் என்னை அணுகுங்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொருவர் மூலம் வாங்குவோம். ராதாபுரம் அப்பாவு அண்ணன், பாளையங்கோட்டை வகாப் எம்எல்ஏ பார்க்கிறார். நெல்லைக்கு ராஜகண்ணப்பன் தான் பொறுப்பு அமைச்சர். அமைச்சர் ஒகே சொன்னதும் கமிஷனைக் கொடுத்துவிடுங்கள்.

கமிஷனுக்கும் ஜிஎஸ்டி தொகை சேர்த்துதான் கொடுக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரத்தில் 18 சதவீதம், மதுரையும் அப்படித்தான். தூத்துக்குடியில் கமிஷன் 20 சதவீதத்திற்கும் அதிகம் ”என பேசுகிறார். எதிரில் இருப்பவர் ஒப்பந்ததாரர். ஆனால், அவரது முகம் வீடியோவில் தெரியவில்லை. இவர் பத்து சதவீத கமிஷனில் முடித்துத் தாருங்கள் என்கிறார். ஆனால் சுப்பிரமணியன் மறுக்கவே, மீண்டும் 15சதவீதத்திலாவது முடியுங்கள் என்கிறார். தொடர்ந்து அது குறித்து பேரம் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ திமுகவிற்கு தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT