பினராயி விஜயன்
பினராயி விஜயன் 
அரசியல்

நிதி ரீதியாக கேரளாவின் கழுத்தை நெரிக்க முயற்சிக்கிறது: மத்திய அரசு மீது பினராயி குற்றச்சாட்டு

காமதேனு

மத்திய அரசு கார்ப்பரேட்களுக்கான அரசு. மத்தியில் காலியாக உள்ள பத்து லட்சம் காலிப்பணியிடங்களைக் கூட நிரப்பவில்லை. இது கோடீஸ்வரர்களின் நலன் பேணும் அரசாக செயல்படுகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “மோடி ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே தலைத்தோங்கி வருகின்றன. பல பில்லினியர்கள் புதிதாக உருவாகி உள்ளனர். அதேநேரத்தில் இந்தியா உலகளாவிய பசி குறியீட்டில் 107-வது இடத்திலும், வறுமைக் குறியீட்டில் 131-வது இடத்திலும் இருப்பது நாட்டின் மோசமான நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது. மத்திய அரசின் கவனம் ஏழை மக்களை மேம்படுத்துவதிலும், பட்டியல் இன மக்களை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டும்.

கேரள அரசையும் நிதி ரீதியாக கழுத்தை நெரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. நாங்கள் சில புதுத்திட்டங்களை ஏழைகளின் மேம்பாட்டிற்காக கொண்டுவர முயற்சித்து வருகிறோம். மத்திய அரசில் பத்து லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் 0.33 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. அமைப்பு சாரா துறைகளில் நாட்டில் பணிபுரியும் 82 சதவீதம் பேருக்கு தொழில் பாதுகாப்போ, சலுகைகளோ இல்லை ”என்று குற்றம் சாட்டினார்.

SCROLL FOR NEXT