அரசியல்

`EWS இட ஒதுக்கீட்டால் 70 ஜாதியை சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள்'- சொல்கிறார் அண்ணாமலை

காமதேனு

``EWS இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள 70 ஜாதியை சேர்ந்த குழந்தைகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்'' என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழக அரசு பாஜக நிர்வாகிகள் மீதான பொய் வழக்குகள் மற்றும் தமிழக அதிகாரிகள் திமுக மாவட்ட செயலாளர்கள் போல திமுகவினரின் அட்டூழியங்களுக்கு துணை போவது குறித்த புகாரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் நிர்மல்குமார் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பிரதமரை வரவேற்று தமிழக மக்கள் "வணக்கம் மோடி" என்று 14 லட்சம் ட்விட் செய்து தங்களது அன்பை காட்டியுள்ளனர். உலகின் தொன்மையான மூத்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி மொத்த இந்தியாவிற்கான பெருமை. எனவே

தமிழக அரசிற்க மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்புகளில் தமிழ் பயிற்று மொழியாக வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரை செய்துள்ளார்.

பிரதமர் தமிழக மக்கள் மீது அளவு கடந்த அன்பை வைத்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் வரும் 19-ம் தேதியன்று வாரணாசியில் தமிழகத்திலிருந்து செல்லும் மக்களை வரவேற்ற்று அவர்களோடு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். EWS இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள 70 ஜாதியை சேர்ந்த குழந்தைகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். திமுக இதை குழப்ப நினைக்கிறது. திமுக சின்னத்தில் நிற்கும் 4 கட்சிகளை கூட்டி வைத்து அனைத்துக்கட்சி கூட்டம் என்று நாடகம் நடத்துகிறது" என்று குற்றம்சாட்டினார்.

SCROLL FOR NEXT