அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கமல்ஹாசன் போட்டி?

காமதேனு

திருமகன் ஈ.வெ.ரா மறைவை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா(46). இவர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் திருமகன் ஈவெரா ஜன. 4-ம் தேதி மரணமடைந்தார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருமகன் ஈ.வெ.ரா மறைவை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று கூறப்படுகின்றது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதே தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் போட்டியிடுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

SCROLL FOR NEXT