சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்
சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் 
அரசியல்

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

காமதேனு

மும்பையில் உள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

பத்ரா சாவுல் நில மோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. முன்னதாக, மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணியில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவரான தொழில் அதிபர் பிரவின் ராவத்தை பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் சுமார் ரூ.11 கோடி சொத்துகளையும் முடக்கப்பட்டது

இந்த வழக்கில் கடந்த 10-ம் தேதி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது. பின்னர் அவருக்கு இரண்டாவது முறையாக கடந்த ஜூலை 27-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதை காரணம் காட்டி அவர் அன்று ஆஜராகவில்லை. இந்த சூழலில் இன்று அவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT