ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்; ஈபிஎஸ் தரப்பு புகாரின் பேரில் நடவடிக்கை!
அரசியல்

ஓபிஎஸ் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்; ஈபிஎஸ் புகாரின் பேரில் நடவடிக்கை!

காமதேனு

கர்நாடகா காந்தி நகர் தொகுதியில், அதிமுக பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார், வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரிடம் விளக்கம் கேட்டுத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடகவின் காந்திநகர் தொகுதியில் அதிமுக பெயரில் ஓபிஎஸ் தரப்பு அளித்த வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் புகார் மனு அளித்திருந்தார்.

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் 3 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். புலிகேசி நகர், கோலார் தங்க வயல், காந்தி நகர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மற்ற இருவரது வேட்புமனுக்கள் நிராரகரிக்கப்பட்ட நிலையில், காந்திநகரின் குமார் மற்றும் கோலார் தங்கவயலின் அனந்தராஜா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதில், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜா சுயேட்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், காந்திநகரில் போட்டியிடும் குமார் அதிமுக வேட்பாளர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு ஈபிஎஸ் அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் திருப்திகரமான விளக்கம் இல்லையெனில் வேட்பாளர் குமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT