அரசியல்

கட்சியில் இருந்து நீக்கியவர்களால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆபத்து: உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு கேட்டு டிஜிபியிடம் திடீர் கோரிக்கை

ரஜினி

அதிமுகவில் இருந்து நீக்கியவர்களால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு தேவை என டிஜிபி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் மணிகண்டன் ஆன்லைன் வாயிலாக டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்," தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுபயணம் செய்து வருகிறார். இதுவரை ஐந்து மாவட்டங்களில் சுற்றுபயணம் முடித்த நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு பின் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான பழனிசாமிக்கு இதுவரை போதுமான போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு வழங்கவில்லை. மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் சமூக விரோதிகளால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT