போராட்டம் நடத்திய பாஜகவினர்.
போராட்டம் நடத்திய பாஜகவினர். 'எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி': புகைப்படத்தை எரித்து பாஜகவினர் போராட்டம்
அரசியல்

'எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி': புகைப்படத்தை எரித்து பாஜகவினர் போராட்டம்

காமதேனு

கூட்டணி தர்மத்தை மீறி தங்கள் கட்சி நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை பாஜகவினர் எரித்ததால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின் தமிழக அரசியல் களம் மாறி வருகிறது. பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பகிரங்க குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.

குறிப்பாக தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார், ஐ.டி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், பாஜக அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்ற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் உள்பட பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அவர்களை பூங்கொத்து கொடுத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

தூத்துக்குடியில் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

இதனால் கடுப்பான பாஜகவினர் சமூக வலைதளங்களில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை பாஜகவினர் இன்று எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்கும் 'எடப்பாடி ஒரு துரோகி' என போஸ்டர் ஒட்டிய பாஜகவினர், எடப்பாடி பழனிசாமியின் படத்தை எரித்தனர். அதிமுக, பாஜகவினர் இடையே சமூக வலைதளத்தில் இருந்த மோதல் தற்போது, பொதுவெளியில் வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT